சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் பணப்பிரச்சனை முடிவுக்கு வரப்போகும் ராசிக்காரர்கள்
சுக்கிரன் ஒரு மாதம் வரை ஒரு ராசியில் இருப்பதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இந்நிலையில் டிசம்பர் 09 ஆம் திகதி சுக்கிரன் கேட்டை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

இவ்வாறு கேட்டை நட்சத்திரம் செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்ச்த்திர பெயர்ச்சியால் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகம் மற்றும் முதலீடுகளில் எதிர்பாராத லாபத்தைப் பெறக்கூடும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக தைரியமும், வீரமும் அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சொந்தமாக தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும் மற்றும் அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலையில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். சொத்து தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளில் இனிமை அதிகரிக்கும்.
