பெண்ணொருவரை தாக்கி கொள்ளை ; பொலிசார் அதிரடி
பெண்ணொருவரைத் தாக்கி அங்கிருந்த பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்ற குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அலவாக்கும்புர பிரதேசத்திலுள்ள வீட்டினுள் கடந்த 10 ஆம் திகதி இரவு வேளையில் நுழைந்த குழுவொன்று அங்கிருந்த பெண்ணை அச்சுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்றபோது வீட்டின் உரிமையாளரின் மனைவி மாத்திரமே அங்கிருந்த நிலையில் அவரை தாக்கி அச்சுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தை வெள்ளை நிற வேனொன்றில் வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட சிலர் அடங்கிய கும்பலே மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, மஹியங்கனை பொலிஸார் சந்தேக நபர்களை வீதித்தடையில் வைத்து சோதனையிட்டபோது சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்