சிகிச்சைக்கு சென்ற இளைஞனின் பிறப்புறுப்பை நீக்கிய மருத்துவர்; சம்பவத்தால் அதிர்ச்சி!
இந்தியாவில் மணிப்பூர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற 28 வயது இளைஞரின் அனுமதி இல்லாமலேயே அவரது பிறப்புறுப்பை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகுர் ரஹ்மான் (28). இவரது பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
பிறப்புறுப்பில் தொற்று
இதன்போது இளைஞனுக்கு சிகிச்சையின் போது பயாப்ஸி என்ற சோதனை செய்ய வேண்டும் என்று வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, அதிகுர் ரஹ்மானுக்கு பயாப்ஸி பரிசோதனை செய்யப்பட்டபோது, அதிகுர் ரஹ்மானின் அனுமதி இல்லாமலேயே அறுவை சிகிச்சை செய்து அவரது பிறப்புறுப்பை வைத்தியர்கள் அகற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வைத்தியசாலை அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட வைத்தியரை, அதிகுர் ரஹ்மான் தொடர்பு கொண்ட போது எந்தவித அழைப்புக்கும் மெசேஜுக்கும் பதிலளிக்கவில்லை.
இதில் மனமுடைந்த பாதிக்கப்பட்ட அதிகுர் ரஹ்மான், பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.