பதவி உயர்வுக்காக போலி சான்றிதழை சமர்ப்பித்த ஏ.எஸ்.பி!
பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கான நேர்முகப் பரீட்சையின்போது, போலி ஆங்கில டிப்ளோமா சான்றிதழை சமர்ப்பித்த, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் , கைது செய்யப்பட்டுள்ளார் .
மிரிஹான தொலைத்தொடர்பு பிரிவில் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவியில் இருந்து , பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை 2014ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
இதன்போது நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய சந்தேகநபர் , நாவலையிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா பாடநெறியை பயின்றதாக தெரிவித்து, சான்றிதழொன்றை வழங்கியுள்ளார்.
அவர் நேர்முகப் பரீட்சையின் பின்னர், பிரதி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின்னர் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், அந்த சான்றிதழ் சம்பந்தமாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.
இதன்போது திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா பாடத்திட்டம் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளநிலையிலேயே பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் . அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.