இந்த செடி வளர வளர உங்கள் கஷ்டமும் குறைந்து கொண்டே இருக்குமாம்
வீட்டில் வறுமை, கஷ்டம், கடன் சுமை, பண கஷ்டம், வேலையில்லா திண்டாட்டம், மன நிம்மதி இல்லை, என்பவர்கள் இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நிச்சயம் இந்த பிரச்சனைகளுக்கான விடிவுகாலம் பிறக்கும்.
பணப்பிரச்சனை தீர வீட்டில் வளர்க்க வேண்டிய செடி இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு வீட்டின் வடகிழக்கு மூலை எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த திசையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வீட்டின் வடகிழக்கு மூலையில், சின்னதாக ஒரு நெல்லிக்காய் செடியை நட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அதில் தண்ணீர் ஊற்றி, வளர்த்து வாருங்கள்.
செடி வளர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பவர்கள் என்ன செய்வது?
சின்ன ஆரஞ்சு நிறத்தில் சதுர வடிவில் ஒரு துணி எடுத்து கொண்டு அதில் ஒரு நெல்லிக்காயை வைத்து முடிச்சு போட்டு வடகிழக்கு மூலையில் தொங்க விடுங்கள்.
இந்த நெல்லிக்காய் காய்ந்தாலும் பரவாயில்லை. மாதத்திற்கு ஒரு முறை பழைய நெல்லிக்காயை எடுத்துவிட்டு புது நெல்லிக்காயை வைக்கவும்.
இது செல்வ செழிப்புக்கும் நல்லது. இதை சாப்பிடும் போது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.
வீட்டில் மகாலட்சுமியின் புகைப்படம் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
அந்த மகாலட்சுமி தாயை இளஞ்சிவப்பு நிறத்தில் விரிப்பு விரித்து அதன் மேலே அமர வைத்தால், ரொம்ப ரொம்ப நல்ல பலன் கிடைக்கும்.
இளஞ்சிவப்பு நிறமும் மகாலட்சுமி தாயும் சேரும்போது அந்த இடத்தில் பண ஈர்ப்பு விதி அதிகரிக்கும்.