குட்டித் தேர்தலில் தனிவழி செல்லும் அரவிந்தகுமார்!
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி, உள்ளாட்சிமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
அதன்படி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தமது கட்சி ‘கார்’ சின்னத்தில் போட்டியிடும் என அரவிந்தகுமார் தெரிவித்தார்.
மலையக மக்களுக்கான உரிமை அரசியல்
அத்துடன் ” மலையக மக்களுக்கான உரிமை அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றை சமாந்தரமாக முன்னெடுத்து – சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம். அதேபோல கல்வி புரட்சிமூலமும் முன்னோக்கி பயணிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி இராஜாங்க அமைச்சராக குறுகில காலப்பகுதிக்குள் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். எதிர்காலத்திலும் முன்னெடுப்பேன் என தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆணை வழங்கினால் அது எமது பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தும் எனவும் கூறினார்.
அதேவேளை மலையகத்தில் தனித்து போட்டியிடும் பிரதான கட்சி எமது கட்சிதான் எனவும் அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.