செயற்கை சர்க்கரை இதயத்தை பாதிக்குமா?
இன்றைய கால கட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்லாது உடல் பிட்னஸ் குறித்து அதிகம் சிந்திக்கும் நபர்கள் சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க விரும்புகின்றனர்.
சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் உடல் வீக்கத்தை அதிகரிக்கிறது.
அதனால் தான் அனைத்து நிபுணர்களும் அதை சீரான அளவில் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இந்த காரணத்திற்காக மக்கள் சர்க்கரை உட்கொள்ளலை குறைக்க நினைகிறார்கள்.
அதற்கான அவர்கள் மாற்று வழியை தேர்தெடுக்க நினைக்கையில் அவர்களின் முதல் தேர்வாக இருப்பது ஆர்டிபிஷியல் ஸ்வீட்னர் எனப்படும் செயற்கை இனிப்பு.
செயற்கை இனிப்பு சர்க்கரையை
இதனை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் செயற்கை இனிப்புகளை வரமாக நினைக்கின்றனர். இன்று பல விதமான பானங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றில் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன.
சோடா போன்ற பானங்கள் முதல் கேக் போன்றவற்றில் கூட செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை டயட் உணவுகள், சர்க்கரை இல்லாத உணவுகள் என்று பெயரிடப்பட்டு விற்கப்படுகின்றன.
மக்களும் இதனை ஆரோக்கிய உணவு என நினைத்து வாங்குகின்றனர். சிலருக்கு இனிப்பின் சுவையை விட்டுவிடுவது மிகவும் கடினமான செயல். இதன் காரணமாக மக்கள் செயற்கை இனிப்பு அதாவது சர்க்கரை இல்லாத மாத்திரையை பயன்படுத்துகின்றனர்.
உடல் எடையை குறைப்பதோடு இனிப்புகளின் சுவையும் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் செயற்கை இனிப்புகளை பயன்படுத்துவது மிக ஆபத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
செயற்கை சர்க்கரை உடல் எடையை குறைக்காது
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில் சர்க்கரை அல்லாத இனிப்புகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலத்திற்கு செயற்கை சர்க்கரையை உபயோகிப்பது எடையைக் கட்டுப்படுத்தாது அல்லது கொழுப்பைக் குறைக்க உதவாது என்று WHO கூறுகிறது.
செயற்கை இனிப்பின் ஆபத்தான பக்கவிளைவுகள்
செயற்கை சர்க்கரையின் பக்க விளைவும் சர்க்கரையைப் போலவே ஆபத்தானது. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதோடு, இதயம் தொடர்பான பல தீவிர நோய்களின் ஆபத்தை உண்டாக்கும் மற்றும் முதியவர்களின் இறப்பு விகிதத்தை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
செயற்கை இனிப்புகளால் ஏற்படும் பக்க விளைவுகள்:
டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயம்
உயர் இரத்த அழுத்தம் என்னும் ஹை பிபி
மாரடைப்பு உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்
இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
இதனை நீண்ட நாட்கள் பயன்படுத்துவது உடல் பருமனை அதிகரிக்கும்.
செயற்கை சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைக்க மக்கள் இயற்கை சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று WHO கூறுகிறது.
இதற்கு பழங்கள் திராட்சை, பேரீச்சம்பழம், பிற உலர் பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். எனினும் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு நிறைந்த பழங்கள் சாப்பிடுவதில் எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்று WHO தெரிவித்துள்ளது.
செயற்கை இனிப்பு மாத்திரைகள் மற்றும் பொடிகள், நியோடேம், சாக்கரின், அஸ்பார்டேம், அசெசல்பேம் பொட்டாசியம், சுக்ரோலோஸ் மற்றும் அட்வாண்டேம் ஆகிய இனிப்பு மூலக்கூறுகளின் சுவையில் தயாரிக்கப்படுகிறது.
மேலும் இதை அதிகமாக அல்லது தொடர்ந்து உட்கொண்டு வந்தால் பழங்களின் இயற்கை இனிப்பு சுவை, குறைந்த இனிப்பு சுவை தெரியாமல் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.