முக்கிய சுற்றுலா தளமொன்றில் துப்பாக்கிகள், இறைச்சியுடன் கைதான நபர்கள்
கோனகங்கார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யால வனப்பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் மான் இறைச்சியுடன் ஐவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கோனகங்கார பொலிஸார் தெரிவித்தனர்.
கோனகங்கார பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைபற்றப்பட்ட பொருட்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 29, 30, 36, 47, மற்றும் 49 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து, 2 உள்நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 3 கிலோ 300 கிராம் மான் இறைச்சி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்கார பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.