மன்னாரில் சட்டவிரோதமான முறையில் கடல் வெள்ளரி அறுவடை செய்த 09 பேர் கைது
மன்னார் மாவட்டம் அரிப்பு கடற்பரப்பில் கடந்த (20.11.2023) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வெள்ளரி அறுவடை செய்த 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நடவடிக்கையின் மூலம் சட்டவிரோதமாக அறுவடை செய்யப்பட்ட சுமார் 1384 கடல் வெள்ளரிகள், டைவிங் கியர் மற்றும் 03 டிங்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள்
இந்நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 47 வயதுக்குட்பட்ட மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் அவர்களின் உபகரணங்கள் மற்றும் கடல் வெள்ளரிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொறுப்பற்ற மீன்பிடி நடைமுறைகளை பொருட்படுத்தாமல் மக்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக, தீவுக்குச் சொந்தமான கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.