பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதி அநுரவை கைது செய்க; CID இல் முறைப்பாடு

CID - Sri Lanka Police Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka President of Sri lanka Buddhism
By Sulokshi Jan 19, 2026 03:00 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு CID இல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு கோரி, பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் இன்று (2026.01.19) கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதி அநுரவை கைது செய்க; CID இல் முறைப்பாடு | Arrest President Anura Once His Term Ends

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முறைப்பாடு 

பிவிதுரு ஹெல உறுமயவின் இளைஞர் செயலாளர் குமார ராஜரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டில் ,

2026.01.16 அன்று யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் பின்வரும் கருத்தை வெளியிட்டிருந்தார் .

லண்டன் வாழ் விவாகரத்தான மச்சாளால் முல்லைத்தீவில் பிளவுபட்ட குடும்பம்!

லண்டன் வாழ் விவாகரத்தான மச்சாளால் முல்லைத்தீவில் பிளவுபட்ட குடும்பம்!

ஜனாதிபதியின் இந்த அறிக்கையானது நாட்டின் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இக்கூற்றின் ஊடாக, வடக்கிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த மதத்தலங்களுக்கு வழிபடச் செல்லும் இந்நாட்டின் பௌத்த மக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தவும், அதன் மூலம் வடக்கிற்கு வரும் பௌத்த மக்கள் மீது கடுமையான வெறுப்பைத் தூண்டவும் ஜனாதிபதி திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளார்.

புத்தர்சிலையை காக்க நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்; சரத் வீரசேகர காட்டம்

புத்தர்சிலையை காக்க நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்; சரத் வீரசேகர காட்டம்

இதன் காரணமாக வடக்கிற்கு யாத்திரை செல்லும் பௌத்தர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், இந்த அறிக்கையின்படி, வடக்கிலிருந்து பல இந்து ஆலயங்களைக் கடந்து கதிர்காமத்திற்கு வழிபடச் செல்லும் தமிழ் மக்கள் தொடர்பில் தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியிலும் வெறுப்புணர்வுகள் ஏற்படக்கூடும்.

நாட்டின் தென்பகுதியில் உள்ள பல கத்தோலிக்க தேவாலயங்களைக் கடந்து வடக்கிலுள்ள மடு தேவாலயத்திற்கு யாத்திரை செல்லும் கத்தோலிக்க மக்கள் தொடர்பிலும் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பினால் பிரச்சினைகள் எழக்கூடும்.

யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி; சிக்கிய தென்னிலங்கை யுவதி

யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி; சிக்கிய தென்னிலங்கை யுவதி

அதன்படி, ஜனாதிபதியின் இந்த உரை காரணமாக இந்நாட்டின் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க ஆகிய அனைத்து மதக் குழுக்களுக்கிடையிலும் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்  சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இருப்பினும், அநுர குமார திசாநாயக்க அவர்கள் தற்போது நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிப்பதனால் அவருக்கு ஜனாதிபதிக்குரிய விடுப்பாதிசாரம் (Immunity) உண்டு என்பதை நாம் அறிவோம்.

எனவே, அவரது பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அநுர குமார திசாநாயக்க அவர்களைக் கைது செய்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US