சபாநாயகர் வீட்டுக்கருகாமையிலிருந்த இரும்புக் குழாய்கள் திருட்டு; சந்தேக நபர்கள் இருவர் கைது
சபாநாயகரின் வீட்டுக்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த 2,812,350 ரூபா பெறுமதியான இரும்பு குழாய்கள் , இரும்பு பொருத்திகள் ஆகியவற்றைத் திருடிச் சென்ற இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கணக்காய்வாளர் திணைக்களத்தின் மின் சுற்றுகளில் பொருத்தப்பட்டிருந்த 2,100,000 ரூபா பெறுமதியான கேபிள் வயர்களை திருடிச் சென்ற மற்றும் இரு சந்தேக நபர்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் அதுல்கோடே பகுதியைச் சேர்ந்த 50, 35, 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
4 சந்தேக நபர்களில் இருவர் இயந்திரங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் தொழில் செய்பவர்கள் எனவும் ஒருவர் மேசன் வேலை செய்பவர் எனவும் மற்றையவர் கூலித்தொழில் செய்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.