தகாத உறவிலிருந்த மனைவியால் ராணுவ வீரர், தந்தைக்கு நடந்த கொடூரம்.. விசாரணையில் பெண் சொன்ன ஷாக் தகவல்
கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் என இருவரை அரிவாளால் வெட்டிக்கொன்று, இருவரின் உடல்களை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பெரும் பரபரப்பு
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் கொடுகூர் பகுதியில் சாலையோரத்தில் இரு உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன. எங்கேயே கொலை செய்து, அவர்களின் உடல்களை எடுத்து வந்து, சாலை ஓரத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி து வைத்து எரித்து இருப்பது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்து எரிக்கப்பட்டு கிடந்த இருவர் தந்தை, மகன் என்பதும், அதில் ஒருவர் ராணுவ வீரர் என்ற அதிர்ச்சி தகவலும் பொலிசாருக்கு தெரியவந்துள்ளன.
தமிழக முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோசியருக்கு உயர் அரசுப்பதவி ; அதிரடிகளுக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை
கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராணுவத்தில் பணிபுரிந்தவரின் மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரருக்கும் மனைவியின் நடத்தை தெரியவந்துள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அரிவாளுடன் மகேஷ்குமாரின் வீட்டிற்குள் சென்ற தகாத உறவிலிருந்த நபர் கணவனையும் தடுக்க வந்த மாமனாரையும் வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் இருவரின் உடல்களை பெட்ஷீட்டில் கட்டி எடுத்துச் சென்று அருகில் உள்ள கொடுகூர் பகுதியிலும், வெப்பாலம்பட்டி பகுதியிலும் போட்டு தீ வைத்து எரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.