தனது குடும்பத்தை ஆயுத முனையில் கண்டி வரை நடத்தி கூட்டிச் சென்ற இராணுவ சார்ஜன்ட்
இராணுவ சார்ஜன்ட் ஒருவர் தனது குடும்பத்தை ஆயுத முனையில் கண்டி வரை நடத்தி கூட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது மனைவி மற்றும் 07 வயது பிள்ளையை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து தலையை கவிழ்த்தவாறு பாதயாத்திரையாகவும் பேருந்திலும் ஏற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி மனைவி மற்றும் பிள்ளை அழைத்துக் கொண்டு தலையை கவிழ்த்தவாறு நடக்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டிக்கு அழைத்துச் சென்ற சார்ஜன்ட்
சார்ஜன்ட் தனது மனைவியையும் பிள்ளையையும் தம்புள்ளையில் இருந்து கண்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பல வீதிகளில் பாதயாத்திரை போன்று நடக்க வைத்து அழைத்துச் சென்று நேற்று முன்தினம் கண்டியில் இருந்து பேருந்தில் ஏற்றி ஹசலக்க பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
இது தொடர்பில் சார்ஜன்ட் மனைவி ஹசலக்க பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரிடம் கூறியதையடுத்து சார்ஜன்ட் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சார்ஜன்ட் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
அவரை மஹியங்கனை நீதிமன்றில் முன்னிலைபடுத்திய பின்னர் மனநல வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.