யாழில் உள்ள மாவீரர் துயிலுமில்லம் ஒன்றில் இராணுவத்தினர் சிரமதானம்!
யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் இராணுவத்தினர் சிரமதானப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அண்மித்த பகுதியில் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கொடிகாமம் துயிலுமில்லப் பகுதியில் சிரமதான நடவடிக்கையினை மேற்கொள்வதற்காகச் சென்றிருக்கின்றனர்.
எனினும் அங்கு பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதால் முன்னணியினர் அங்கிருந்து விலகி பருத்தித்துறை நோக்கிப் பயணித்திருப்பதாக தெரியவருகிறது.
அதேவேளை யாழ்ப்பாணத்தின் 03 நீதிமன்றங்கள் மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க மறுத்தமையால் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.