பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்த அறிவிப்பு
பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் தடுப்பூசிகளுக்கு முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் ,கொவிட் பரவுவதைத் தடுக்க பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் , அனைத்து மக்களையும் உடனடியாக தடுப்பூசியைப் பெறுமாறும் இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.
மேலும் பூஸ்டர் பற்றிய புராணக் கருத்துக்களால் ஏமாற வேண்டாம் எனவும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினர் தடுப்பூசி நிலையங்களை வெற்றிகரமாக அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.