பொதுவெளியில் தனிப்பட்ட பிரச்சினைகளை பேசும் அர்ச்சுனா ; தம்பிராசா காட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், இளங்குமரனுக்கும் ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் அதனை பொதுவெளியில் பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், யாழ், மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் செயற்பாடுகள் அரசாங்க பொது கூட்டங்களில் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முன்னதாக சில தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமிழ் எம்.பிக்கள் தற்போது உள்ளூராட்சி தேர்தல் வந்தவுடன், அவர்களுக்காகவே வாக்கு கேட்டு வந்து நிற்கின்றமை நியாயமிக்க செயற்பாடா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது அவரின் கருத்து தொடர்பில் முழுமையான காணொளியை இங்கு காணலாம்.