கொழும்பு நபர் ஒருவர் தாக்கி கொலை ; வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்தது
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று (29) அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வாக்குவாதம்
உயிரிழந்தவர் கொழும்பு - 15 ஹேனமுல்ல முகாம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தாக்குதல் காரணமாக ஏற்பட்ட காயத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமது விட்டிற்கு அருகில் முச்சக்கரவண்டியை நிறுத்தி களியாட்டங்களில் ஈடுபட்ட சிலருடன் இடம்பெற்ற வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் உயிரிழந்தவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதன்பின்னர் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.