FIFA கால்பந்து போட்டி ; சொந்த நாட்டு உணவுகளை இறக்குமதி செய்த ஆர்ஜென்டினா
FIFA கால்பந்து கிண்ண தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள ஆர்ஜென்டினா அணி, தங்கள் வீரர்கள் சொந்த நாட்டு உணவுகளை உண்பதை உறுதிப்படுத்த தமது நாட்டிலிருந்து பிரத்தியேக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளன.
ஆர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கால்பந்து கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.

500 கிலோ மாட்டிறைச்சி அமெரிக்காவிற்கு இறக்குமதி
இந் நிலையில் , வீரர்கள் சோர்வின்றி இருக்கவும், சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வைப் பெறவும் சுமார் 500 கிலோ மாட்டிறைச்சியை ஆர்ஜென்டினாவிலிருந்து கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்துள்ளது. இதில் லோமோ, வாசியோ, என்ட்ரனா போன்ற பாரம்பரிய இறைச்சி வகைகள் உள்ளடங்கும்.
கடுமையான சுங்க மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, பல மாதத் திட்டமிடலுக்குப் பின்னரே இந்த உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

போட்டிகளுக்கு இடையிலான குறுகிய இடைவெளியில், வீரர்கள் விரைவாக மீண்டு வருவதற்கு இந்த ஊட்டச்சத்துமிக்க உணவுகள் பெரிதும் உதவுவதாக அணிகளின் மருத்துவ மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளிகளில், ஆர்ஜென்டினா வீரர்கள் பயிற்சியின் போதும், ஓய்வு நேரங்களிலும் பார்பிக்யூ முறையில் இந்த உணவுகளை ரசித்து உண்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.