இலங்கையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பிரதேசங்கள் இவைதான்
கொவிட் தொற்றாளர்களுள் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் கொழும்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகவலை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன் கறுப்பு பூஞ்சை என்பது சுற்றாடல் சார்ந்த நோயெனவும் இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.