பணக் கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா? கற்பூரத்தை இப்படி வைத்து பாருங்கள்
எல்லா கெட்டதும், எல்லா எதிர்மறை ஆற்றலும் நம்முடைய இரண்டு உள்ளங்கைகளில் தான் போய் தங்கி இருக்கும்.
நாம் தொட்டது எல்லாம் துலங்காமல் போக நம்முடைய உள்ளங்கையும் ஒரு காரணம். அதை சுத்தம் செய்து விட்டால் போதும் வாழ்வில் மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்து விடலாம்.
அதாவது உள்ளங்கை வழியாக உடம்பில் இருக்கும் அத்தனை துர் சக்திகளையும் இழுத்து வெளியே தள்ள முடியும்.

எவ்வாறு செய்ய வேண்டும்
கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து ஒரு தட்டு நிறைய கல் உப்பை பரப்பி வைத்து விட்டு இரண்டு கையாளும் அந்த கல்லுப்பை அள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கையில் அள்ளிய இந்த உப்புக்கு மேலே ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து அந்த பச்சை கற்பூரத்தை ஏற்றி விட வேண்டும்.
இந்த பரிகாரத்திற்கு நிச்சயம் இன்னொருவரின் துணை தேவைப்படும். ஆனால் கல் உப்பில் உதவி செய்பவர்களுடைய கை படக்கூடாது.
பச்சை கற்பூரத்தை மட்டும் கல் உப்பின் மேல் வைத்து அதில் நெருப்புப் பொருத்த சொல்லலாம்.
கையில் சூடு இறங்காத அளவுக்கு கைநிறைய கல் உப்பை அள்ளிக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரம் முழுவதும் எரிந்து முடிய வேண்டும்.

கற்பூரத்தை எவ்வாறு வைக்க வேண்டும்
சின்ன துண்டு பச்சை கற்பூரமாக அந்த கல்லுப்பின் மேல் வைக்க வேண்டும். கை வலிக்காமல் இருக்க கையை அப்படியே தொடை மீது வைத்துக் கொண்டாலும் தவறு கிடையாது.
ஆனால் இதில் நெருப்பு பற்ற வைப்பதால் நீங்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
அலட்சியமாக இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. அந்த பச்சை கற்பூரம் எரிந்து முடிந்த பின்பு கையில் இருக்கும் உப்பை அப்படியே கொண்டு போய் ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் போட்டு கரைத்து விட வேண்டும்.
உங்களுடைய கெட்ட நேரம் முடிந்து உங்கள் உடம்பில் இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலையும் இந்த கல்லுப்பு தன்னகத்தே ஈர்த்துக் கொண்டு இருக்கும்.
அந்த பச்சை கற்பூரம் உங்களுக்கு நேர்மறை ஆற்றலை கொடுத்திருக்கும்.

பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும்
இந்த பரிகாரத்தை 3 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.
காலை எழுந்தவுடன் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு குளித்து விடுங்கள். முகம் கை கால் கழுவி பரிகாரத்தை செய்ய வேண்டும்.
பரிகாரம் முடிந்தவுடன் குளிக்க வேண்டும். இதை செய்தால் நிச்சயமாக நீங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் உங்களை வந்து சேரும்.
உடம்பிலிருந்து அந்த துர் சக்தி கெட்ட நேரம் எல்லாம் வெளியே ஓடிவிடும்.