காதல் துணை கிடைக்காமல் வாடுகிறீர்களா? இந்த சுக்கிரன் பரிகாரங்களை செய்யுங்கள்!
நீங்கள் விரும்பிய காதல் துணை உங்களுடன் இணைய வேண்டும் என விரும்பினால், நீங்கள் கிருஷ்ணரையும் ராதையையும் வணங்க வேண்டும்.
ராதா-கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும், சுக்கிரன் கிரகம் காதல் துணை கிடைக்க அருள் புரியும் உகந்த கிரகமாகும்.
காதலர் வாரம் 2023 பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் அதாவது பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் தொடங்குகிறது. நீங்களும் உங்கள் உண்மையான காதல் துணை தேடுகிறீர்களானால், சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்த ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
நல்ல குடும்ப உறவுகளைப் பேணுவதற்கு, சுக்கிரன் கிரகம் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்.
காதலர் வாரம் 2023 இல் மட்டுமல்ல, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் மற்றும் கணவன் - மனைவி இடையேயான உறவுக்கு இடையேயான நல்லுறவுக்கும் இந்த பரிகாரங்களை நீங்கள் செய்ய வேண்டும்.
சுக்கிரனை வலுப்படுத்த கீழ்கண்ட பரிகாரங்களை செய்யுங்கள் :
- ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற, வெள்ளிக்கிழமையன்று வெள்ளை ஆடை அணிந்து 'ஓம் த்ரன் த்ரின் த்ரௌண் ச: சுக்ரே நம' என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
- வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை, அரிசி, பால்-தயிர் மற்றும் நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவை உண்டு விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சுக்கிரன் பலம் பெறுகிறான்.
- சுக்கிரன் வலுப்பெற வெள்ளை வஸ்திரம், அரிசி, சர்க்கரை, நெய், தயிர் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். சாஸ்திரங்களின்படி, தான தர்மம் செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
- சிவபொருமானாகிய மகாதேவனை மகிழ்வித்தாலும் சுக்கிரனை வலுப்படுத்தலாம். இதற்கு வெள்ளியன்று சிவபெருமானுக்கு வெண்ணிற மலர்களை அர்ச்சித்து வழிபட வேண்டும்.
- ஆடைகளில் வாசனை திரவியம் பூச வேண்டும். நீங்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு ஆடைகளை அணிய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காதலில் வெற்றி பெறலாம்.
- விரும்பிய காதல் துணையை அடைய அல்லது காதல் திருமணம் கை கூட, சிவப்பு / இளஞ்சிவப்பு துணியில் கடவுளின் படம் அல்லது சிலையை வைத்து, தூபம், தீபம், மலர், இனிப்பு, வாசனை திரவியம் போன்றவற்றை சமர்ப்பித்து, ராதாவிற்கு மனதிற்கு இனிய ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குங்கள். கிருஷ்ணாய நம: என்ற மந்திரத்தை தினமும் சந்தன மணிகளால் ஆன இளஞ்சிவப்பு நிற ஆசனத்தில் அமர்ந்து மந்திரத்தை உச்சரித்த பிறகு கடவுளுக்கு தேன் அர்பணிக்கவும்.
- விஷ்ணு மற்றும் லக்ஷ்மியின் சிலை அல்லது புகைப்படத்தின் முன், வியாழன் அன்று 'ஓம் லக்ஷ்மி நாராயணாய நம' மந்திரத்தை உச்சரித்து, ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுமார் 3 மாதங்களுக்கு கோயிலில் பிரசாதம் வழங்கவும்.