முட்டைப் பிரியரா நீங்கள்? மறந்தும்கூட இதெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க!
பொதுவாகவே சிலரின் தவறான உணவு சேர்க்கைகள் செரிமானப் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு இது சோர்வு, குமட்டல் மற்றும் குடல் நோய்களுக்கு வழிவகுக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஒரு மோசமான உணவு கலவை மனித உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும். எனவே, சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
முட்டை அதிக சத்தானது. புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. முட்டையானது நிறைய உணவுகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது . சிலர் முட்டையை தனியாக சாப்பிட விரும்புகிறார்கள், மற்றவர்கள் இறைச்சிகள், பால் பொருட்கள் மற்றும் காபின் கலந்த பானங்களுடன் சாப்பிடுவார்கள்.
ஆனால், முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என கூறப்படுகின்றது.
அந்த வகையில் முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள்;
சர்க்கரை:
சர்க்கரையுடன் முட்டைகளை சாப்பிட வேண்டாம். இது அமினோ அமிலங்களை வெளியிடுகிறது மற்றும் மனித உடலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். அதோடு இரண்டையும் சேர்த்து உண்னும்போது அது உங்கள் இரத்தத்தில் கட்டிகளை உருவாக்கலாம் என கூறப்படுகின்றது.
சோயா பால்:
ஏனெனில் சோயா பாலுடன் முட்டைகளை சாப்பிடுவது உங்கள் உடலில் புரதத்தை உறிஞ்சுவதைத் தடுக்கும். தேநீர்: பலர் தேநீரையும் முட்டையையும் ஒன்றாகச் சாப்பிடுவார்கள். இருப்பினும், இந்த கலவையானது மலச்சிக்கலை ஏற்படுத்தும். இது உங்கள் உடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
மீன்:
முட்டையையும் மீனையும் ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். பன்னீர்: மீனைப் போலவே, முட்டையையும் பன்னீருடன் சேர்த்து சாப்பிடுவதால் ஒவ்வாமை மற்றும் உடலில் மற்ற நோய்கள் உருவாகலாம்.
வாழைப்பழம்:
முட்டை சாப்பிட்ட பிறகு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டாம். குறிப்பாக, ஜிம்மிற்கு செல்பவர்கள் முட்டை மற்றும் வாழைப்பழங்களை ஒன்றாக உட்கொள்வதை பழக்கமாக வைத்துள்ளனர். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் சொல்லப்படுகின்றது.