வெள்ளைப் பூசணி சாறில் இவ்வளவு நன்மைகளா?
வெள்ளை பூசணி வியக்கவைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. வெள்ளைப் பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும்.
அதோடு வெள்ளைப் பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். இன்னும் பல நன்மைகளையும் வெள்ளைப்பூசணி நமக்கு அளிக்கின்றது.
அந்தவகையில், வெள்ளைப் பூசணி சாறில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த மூலமாகும். இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது.
முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள்.
இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரையுமிது வெளியேற்றிவிடும். அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி ஜூஸ் உடனடி பலனைத் தரும்.
அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி ஜுஸ் உதவும். வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையிலும் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கும் வெள்ளை பூசணி சாறு மிகவும் உகந்தது.