தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
புரதச் சத்து மிகுந்த உணவான முட்டையில் 13 வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. உங்கள் காலை உணவில் முட்டையைச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

முட்டைகள் பலவிதமான உணவுகளைத் தயாரிக்கப் பயன்படும் மிகச் சிறந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும். மேலும் இது பல பிற உணவுகளைத் தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் விளங்குகின்றன. மேலும், முட்டைகள் புரதச்சத்து மிகுந்த உணவாகும்
காலை உணவில் முட்டைகளைச் சேர்த்துக்கொள்வது, ஆரோக்கியமான இரத்தச் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளைப் பராமரிக்க உதவும். எனவே, நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை உண்பதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

கண் ஆரோக்கியம்
வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் (zinc) நிறைந்த முட்டைகளைத் தொடர்ந்து உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி
முட்டைகளைத் தொடர்ந்து உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் உதவும்.
தசை ஆரோக்கியம்
முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தினமும் உண்பது தசை வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதய நலன்
தொடர்ந்து முட்டை சாப்பிடுவது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும்.
எடை இழப்பு
முட்டைகளை தினமும் உண்பது பசியைக் குறைக்கவும், அதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
மூளை ஆரோக்கியம்
முட்டையில் உள்ள கோலின் (choline), மூளை ஆரோக்கியத்திற்கும் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
