மட்டக்களப்பில் அழிக்கப்படுவது கருவேல மரங்களா? சீமைக்கருவேல மரங்களா?; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தீங்கு தரும் சீமைக்கருவேல மரங்கள் மாநகர சபையால் அழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அங்கு அழிக்கப்படுபவை கருவேல மரங்களா? அல்லது சீமைக்கருவேல மரங்களா? என்பதை எவரேனும் உறுதிப்படுத்துமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கருவேலம் (Acacia nilotica)

ஏனெனில் கருவேலம், சீமைக் கருவேலம் ஆகிய மரங்கள் இரண்டையும் அனேகர் ஒரே மரம் என நினைக்கின்றனர். ஆனால் Acacia nilotica எனும் கவேல மரம் , இது சுதேசிய மரம் என்றும் அதனை நாங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியன் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதேசமயம் Prosopis juliflora எனப்படுவது , அந்நிய ஆக்கிரமிப்பு தாவரம் என சுட்டிக்காட்டியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அது, அழிக்கப்பட வேண்டியது என்றும் கூறுகின்றனர்.
சீமைக்கருவேலம்(Prosopis juliflora)

அத்துடன் சீமைக் கருவேல மரங்களே எங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருக்கின்றதாக தெரிவித்த அவர்கள், சுதேசிய மரமான கருவேல மரங்கள் பாதுக்காக்கப்படவேண்டியது எனவும் வலியுறுத்துகின்றனர்.
மேலும் மட்டக்களப்பு, புதுப்பாலம் பிரதேசத்தில் காணப்படுகின்ற கருவேல மரங்கள் அதிகம் உள்ளதாகவும் கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதனை காணும்போது மனதுக்கு மகிழ்ச்சியாகஉள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.