இறக்குமதியான புதிய வாகனங்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறதா?
அண்மையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களையும் மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியும், தவறான உற்பத்தி திகதிகளுடன் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
வாகன ஏற்றுமதி
எனினும், வாகனங்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், சுங்கத்தினால் முறையாக பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பழைய வாகனங்கள் எவையும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் எந்தவொரு வாகனமும் மீள ஏற்றுமதி செய்யப்படமாட்டாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.