இடையூறு ஏற்படுத்தியதால் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்பி !
பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , பாராளுமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று (8) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எழுப்பப்பட்ட கேள்வியால் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அர்ச்சுனா எம்பி சபையிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.
பிமல் ரத்நாயக்கவின் உரைக்கு இடையூறு
சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்கவின் உரைக்கு இடையூறு விளைவித்துக்கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை சபையிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சபை அமர்வுகளை குழப்பும் வகையில் ஒழுங்குப் பிரச்சினை என்று கோரி அவர் குழப்பம் விளைவிப்பதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.