அர்ச்சுனா எம்.பி.யின் சமர்ப்பணங்கள் இன்று
அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அர்ச்சுனா எம்.பி.யின் சமர்ப்பணங்கள் இன்றைய தினம் (2) முன்வைக்கப்படவுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பின்ராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டே பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்ற விடயம் நீதி மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதன்போது அரச தரப்பில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்த்தன, எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் தற்போதும் ஒரு பொது அதிகாரியாகக் கருதப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இதையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்களின் சமர்ப்பணங்களுக்காக வழக்கு இன்று தவணையிடப்பட்டமை குறிப்பிடத்தக்க
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        