தாஜ்மஹால் சர்ச்சை குறித்து தொல்லியல் துறை வெளியிட்ட மர்மம்!

Delhi India
1 மாதம் முன்
Poongodi

Poongodi

இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும்.

இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும், என்று சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறினார். அந்த தாஜ்மஹால் இன்று சர்ச்சை கருத்துக்கள் எனும் கல்வீச்சுக்கு உள்ளாகி வருகின்றது. உலக அதிசயங்களில் ஒன்றாக பெருமைபெற்ற தாஜ்மஹால் முழுவதும் பளிங்குக் கற்களாலான உலகப் புகழ் பெற்ற காதல் சின்னம் ஆகும். ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.

இக் கட்டடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹால், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகச் சின்னமாகும். வருடா வருடம் அதிகளவு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் மிக பெரிய சுற்றுலா தலமாகவும் உள்ளது. ஆனால், இன்று விவாதப் பொருளாகியுள்ளது.

­ ‘தாஜ்­மஹால்’ நினை­வுச்­சின்­னத்தின் பெயர் ராம் மஹால் என்று மாற்றம் செய்­யப்­படும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்­திர சிங் கூறி­ ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். மேலும் ஆக்­ராவின் தாஜ்­மஹால், ஒரு­கா­லத்தில் சிவ­பெ­ரு­மானின் ஆல­ய­மாக இருந்­தது. எனவே, உத்­த­ரப்­பி­ர­தேச மாநில முத­ல­மைச்சர் யோகி ஆதித்­ய­நாத்தின் ஆட்­சியில் தாஜ் மஹால் ராம் மஹால் என்று பெயர் மாற்­றப்­படும்,' என உறுதி அளித்தார்.

தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் தேஜோ மகால் என்ற இந்துக் கோவில் இருந்தது என்று பா.ஜ.க. எம்.பி. வினய்கத்தியார் ஒரு கதையைச் சொல்லி பிரச்சினையை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத்ராம் , தாஜ்மகாலுக்கு வரலாற்றில் இடம்கொடுக்கவே கூடாது என்றார். சுப்பிரமணிய சாமியோ, தாஜ்மஹால் இருக்கும் இடம் ஜெய்ப்பூர் மன்னரிடம் இருந்து ஷாஜகான் வாங்கியது என்கிறார்.

தாஜ்மஹால் சர்ச்சை குறித்து தொல்லியல் துறை வெளியிட்ட மர்மம்! | Archeology Reveals Mystery Taj Mahal Controversy

40 ஏக்கர் நிலத்திற்காக, 40 கிராமங்களை ஷாஜகான் கொடுத்தார் என்றும், அந்த இழப்பீடு போதாது என்று ஜெய்பூர் மன்னர் கூறினார் என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். தாஜ்மஹால் குறித்து முதலில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில்தான் கதைகள் பரப்பப்படும். பின்னர் அந்தக் கதைகளை பாஜக தனது பிரசாரமாக மாற்றுகிறது என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. நவாப் மாலிக்கும், பாபர் மசூதியை போல தாஜ்மகாலையும் இடிக்க பா.ஜ.க.வும் காவிக்கூட்டமும் சதி செய்வதாக சமாஜ்வாதி எம்.பி. அசம்கான் குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வாறு தாஜ்மஹால் பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்ற நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சை உருவானது. தாஜ்மஹாலில் பூட்டப்பட்டு உள்ள 20 அறைகளை திறக்க கோரி பொதுநல வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதற்கிணங்க தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக் கோரிய வழக்கு விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னவ் கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் நடைபெற்றது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''தாஜ்மஹாலின் உண்மை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் தொல்லியல் ஆய்வுத்துறையிடல் கொடுக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காணங்களுக்காக அந்த அறைகள் பூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பூட்டப்பட்டுள்ள அந்த அறைகளில் பல விடயங்கள் மறைந்துள்ளன, அது என்ன என்பது பொது வெளிக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

தாஜ்மஹால் சர்ச்சை குறித்து தொல்லியல் துறை வெளியிட்ட மர்மம்! | Archeology Reveals Mystery Taj Mahal Controversy

குறிப்பாக முகலாய மன்னர் அவுரங்கசீப் தனது தந்தைக்கு எழுதிய கடிதம் கூட உள்ளதாக கூறப்படுகிறது'' என்று வாதிட்டார். அதற்கு பதிலளித்த உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞர், ''வழக்கை தற்போது இந்த நீதிமன்றத்தில் தொடுக்க மனுதாரர்களுக்கு முகாந்திரம் இல்லை, ஏனெனில் ஏற்கனவே ஆக்ரா நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என சுட்டிக்காட்டினார் அதற்கு மறுப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் நிலம் யாருடையது என்று நான் கோரவில்லை, மாறாக தாஜ்மஹாலில் புதைந்துள்ள உண்மைகள் வெளிவர வேண்டும், குறிப்பாக பூட்டப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட வேண்டும் என்பதே.

மேலும் அந்த கட்டுமானத்தின் வயது தொடர்பாக சந்தேகம் எழுப்பும் சில தரவுகளை இணைத்துள்ளேன் எனக் கூறினார் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள் தாஜ்மஹாலின் வயதை சந்தேகிக்கிறீர்கள் என்றால், ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டவில்லை எனக்கூறுகிறீர்களா? இங்கு தாஜ்மஹால் யார் கட்டியது என்று தீர்ப்பு கூறவா இன்று நீதிமன்றம் கூடியுள்ளது. வரலாற்று விடயங்கள், தரவுகளுக்குள் போக விரும்பவில்லை. பூட்டப்பட்டுள்ள கதவுகளை திறக்க வேண்டும், உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்த வேண்டும் என்பதே உங்கள் கோரிக்கை.

எந்த அடிப்படையில், எந்த உரிமையில் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகினார் என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் நாட்டு குடிமகன் என்ற அடிப்படையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒரு விடயம் தொடர்பான தரவுகளையே அறிய முடியும், கேட்க முடியும், மாறாக ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

தாஜ்மஹால் சர்ச்சை குறித்து தொல்லியல் துறை வெளியிட்ட மர்மம்! | Archeology Reveals Mystery Taj Mahal Controversy

ஆராய்ச்சி நடத்த வேண்டும் என அந்த சட்டத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, தாஜ்மஹால் குறித்து உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும் என கோருகிறேன். நமக்கு தவறான வரலாறு கற்பித்திருந்தால் அது திருத்தப்பட வேண்டும். மேலும் பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய எம்.ஏ, நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் உங்களை இணைத்து கொண்டு ஆய்வு செய்ய கோருங்கள்.

அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள். நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விவாதிக்க வாருங்கள் ஏற்கிறோம். ஆனால் நீதிமன்றத்தில் இது போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்றனர். பின் அலகாபாத் உயர் நீதிமன்றம் இநத பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்திய தொல்லியல் துறை தாஜ்மஹாலின் 22 நிலத்தடி அறைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த அறைகளில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகளைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. தாஜ்மஹாலின் அடித்தளத்தில் பூட்டிய 22 அறைகள் குறித்து பரவலான விவாதங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இந்த அறைகளுக்குள் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளின் படங்களை வெளியிட்டு பதற்றத்தைத் தணிக்க முயன்றுள்ளது. நாட்டில் உள்ள இந்த அறைகளின் உள்ளடக்கம் குறித்த தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க இந்தப் படங்கள் பொது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

எவரும் தொல்லியல் துறை இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தாஜ்மஹாலின் 22 நிலத்தடி அறைகளின் புகைப்படங்களை பார்க்கலாம் என்று தொல்லியல் துறை ஆக்ரா பிரிவின் தலைவர் ஆர் கே படேல் தெரிவித்தார். அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த அறைகளைத் திறப்பதற்காக பா.ஜ.க.வின் ரஜ்னிஷ் குமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மூடிய அறைகளில் பூச்சு மற்றும் சுண்ணாம்பு அலமாரி உட்பட விரிவான மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அறைகளின் மறுசீரமைப்பு பணிக்கு ஆறு இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வண்ணார்பண்ணை, Ottawa, Canada

30 Jun, 2022
மரண அறிவித்தல்

நீர்வேலி, Montreal, Canada

03 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, தமிழ்நாடு, India

04 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

04 Jul, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, பரிஸ், France

24 Jun, 2022
நன்றி நவிலல்

உருத்திரபுரம், மண்டைதீவு, Mönchengladbach, Germany, England, United Kingdom

05 Jun, 2022
மரண அறிவித்தல்

வவுனியா, Ajax, Canada

03 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், கோப்பாய், கொழும்பு, சிட்னி, Australia

05 Jul, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கிளிநொச்சி, Brampton, Canada

18 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

07 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், Ilford, United Kingdom

05 Jul, 2017
நன்றி நவிலல்

Teluk Intan, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Jun, 2022
மரண அறிவித்தல்

நுணாவில், சாவகச்சேரி, கந்தர்மடம், கொழும்பு, Toronto, Canada

04 Jul, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கன்பெறா, Australia

02 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Zürich, Switzerland

08 Jul, 2017
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு, London, United Kingdom

17 Jun, 2022
மரண அறிவித்தல்

மன்னார், புதுக்குளம்

04 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், கன்பெறா, Australia

02 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

29 Jun, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

02 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, வவுனியா

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அரசடி

01 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mississauga, Canada

01 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, London, United Kingdom

03 Jul, 2017
மரண அறிவித்தல்

நேரியகுளம், குருநகர், Chelles, France

27 Jun, 2022
மரண அறிவித்தல்

புத்தூர், அம்பனை, கொழும்பு

30 Jun, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom, சிட்னி, Australia

27 Jun, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US