அரகலய செயற்பாட்டாளர் ரஜீவ்காந் கைது!
திருகோணாமலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரகலய செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸார் -ஆர்ப்பாட்டக்காரர் முறுகல்
இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறவுகள் கலந்துகொண்டனர். பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் திருகோணமலை கடற்கரைக்கு முன்னால் இடம்பெற்றது.
“OMP ஒரு ஏமாற்று நாடகம்”, ”காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை”, “சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நாங்கள் கோருகிறோம்” உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியும், ஈகைச் சுடரினை ஏற்றியும் கண்ணீருடன் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.