அமெரிக்காவின் முக்கிய விழாவில் ஏ.ஆர்.ரகுமான் தனது மகனுடன் செல்பி!
அமெரிக்காவில் கிராமி விருது வழங்கும் விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மகனுடன் கலந்து கொண்டார்.
இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. கடந்த ஜனவரியில் நடக்க வேண்டிய இந்த விழா கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது நடந்துள்ளது.
இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் டிரெவர் நோவா (Trevor Noah)தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான இசை கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்திய சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கிராமி விருது விழாவில் மகனுடன் எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார். ஒரு செல்பி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Grammys? pic.twitter.com/wM0q42kOFG
— A.R.Rahman (@arrahman) April 3, 2022