உங்கள் தலைவராக இந்தியரை நியமியுங்கள்; ரஜீவன் எம்.பிக்கு பதிலடி
நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பதிவிட்ட முகநூல் பதிவு ஒன்றுக்கு ஒருவர் முகத்தில் அறைந்தாற்போல் கருத்து பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் முகநூல் பதிவில்,
"யாழ்ப்பாணம் திசைகாட்டி இரண்டாம் இடம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 சபைகளில் 409 ஆசனங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி 135 ஆசனங்கள் (33%), தேசிய மக்கள் சக்தி 81 ஆசனங்கள் (19.8%) சைக்கிள் 79 ஆசனங்கள் (19.3%)" என பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் பதிவிற்கு சகோதர மொழி பேசும் நபர் ஒருவர்,
"உங்கள் தலைவராக ஒரு இந்தியத் தமிழரை நியமிப்பதைத் தொடருங்கள். அடுத்த முறை நீங்களும் வீட்டிற்குச் செல்லலாம். ஒரு சிங்களவனாக இதை நான் அறிந்தளவு உங்களால் அறிய முடியவில்லையே" என பதிலடி கொடுத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.