ஆப்பிள் iPhone 17 இதுவரை இல்லாத ஒரு மாடல் ; அசர வைக்கும் விலை
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை தொலைபேசி சந்தைகளுக்கு அறிமுகமாகியுள்ளது. இவற்றின் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய தொலைபேசிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ்
இவற்றுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் எஸ் இ 13 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 ஆகிய ஸ்மார்ட் கைக் கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஐபோன் 17 ப்ரோவின் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் $1,099 விலையில் (333,451 இலங்கை மதிப்பில்) ஆரம்பமாகிறது, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மாடலின் ஆரம்ப விலை (363,792 இலங்கை மதிப்பில்) விலையிலும் கிடைக்கின்றன.
இந்த போன்கள் காஸ்மிக் ஆரஞ்சு, டீப் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஐபோன் 17 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் உலகளவில் விற்பனைக்கு வரும்.