யார் என்ன சொன்னாலும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதை நிறுத்தப்போவதில்லை!
யார் என்ன சொன்னாலும் உக்ரைன் சுற்றலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவருவதை தாம் நிறுத்தப் போவதில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளிடமிருந்தே டெல்டா உள்ளிட்ட தொற்றுக்கள் பரவியதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
மேலும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையில் கோவிட் தொற்று பரவ வாய்ப்பு இல்லை என்றும் அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மைய நாட்களில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்புதுடன் , உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளதனால் நாட்டை முடக்குமாறு பலதரப்பினரும் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.