ஜனாதிபதி அநுரகுமார கச்சத்தீவுக்கு செல்வதற்கு தாமே காரணம் என்கிறார் நாமல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மற்றும் கிழக்குக்கு அச்சமில்லாமல் செல்வதற்கும், கச்சத்தீவுக்கு செல்வதற்குமான பாதுகாப்பான சூழலை போர முடிவுக்கு கொண்டுவந்த இராணுவத்தினரே ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது என நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
மகாநாயக்க தேரரை நேற்று சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் நாலம் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இராணுவத்தினரை பழிவாங்கும் அரசாங்கம்
தொழிற்சங்கத்தினர் தோளில் ஏறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தொழிற்சங்கத்தினரின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தற்போது செவிசாய்ப்பதில்லை மாறாக தொழிற்சங்கத்தினரை அடக்கும் வகையில் செயற்படுகிறது.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை மகாநாயக்க தேரர்களுக்கு எடுத்துரைத்துள்ளோம். இராணுவத்தினருக்காக குரல் கொடுக்கும் சகல தரப்பினரும் எம்முடன் ஒன்றிணையலாம் என்றார்.
அதோடு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.
மறுபுறம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கத்துக்கமைய அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவும் முயற்சிக்கிறது. இராணுவத்தினரை பழிவாங்கி தேசிய கட்டமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவது முறையற்றது என்றும் நாமல் ராஜபக்க்ஷ கூறினார்.