கடந்த ஆட்சியின் 3 திட்டங்களை ரத்து செய்த அனுர அரசாங்கம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் சேவையை நிறுத்துவதற்கு ஜனாதிபதி அனுர தலமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் 'வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் விவகாரங்களுக்கான அலுவலகம்' நிறுவுவதற்கும் 'தேசிய மக்கள் பேரவை' ஒன்றை நிறுவி 'விவசாயம் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசாங்கம் இந்த முயற்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களை நியமித்தது.
எனினும், இந்த அலுவலகங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் எதிர்பார்க்கப்பட்ட செயற்பாடுகளை தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் கையாளக்கூடிய நிலையில் உள்ளது.
இதன் காரணமாக , ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அமைச்சர்கள் அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதான ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார்.