யாழில் மேலுமொரு பெண் கொரோனாவுக்கு பலி
யாழில் கொரோனாவுக்கு மேலுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் உயிரிழந்த 68 வயதான பெண்ணிற்கும் தொற்று உறுதியானது.
இன்று 174 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அடையாளம் காணப்பட்டவர்களில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 18, 19 வயதான மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் தொற்று உறுதியாகியுள்ளதுடன் , வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
மேலும் கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர் தொற்றிற்குள்ளாகிய நிலையில் அவர்களில் 4, 5, 12 வயதான சிறுமிகள் மற்றும் 10 வயதான சிறுவனும் உள்ளடங்குகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.