பிக் பாஸ் வீட்டில் மற்றுமொரு வைல்ட் கார்டு என்ட்ரியா?...வெளியான தகவல்
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் எலிமினெட் ஆன அபிஷேக் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்தார்.
அவரது என்ட்ரியின் போது இமான் அண்ணாச்சியின் ரியாக்சன் மிகவும் வைரலானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரியாக நடன இயக்குனர் ஒருவர் பங்கேற்பது போன்று இன்றைய பிக் பாஸ் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் யாருமே சரிவர நடனம் ஆடுவதில்லை என நேற்றே பிக் பாஸ் நடன டாஸ்க் வைத்த நிலையில் புதிதாக டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தான் உள்ளே வரப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. ஊட்டியில் ADS எனும் நடன பள்ளியை நடத்தி வரும் கொரியோகிராபர் அமீர் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 3ல் சாண்டி தான் ஜெயிக்கணும் என பேட்டியெல்லாம் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை கவனமாக பார்த்து வரும் அமீருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் எப்படி பர்ஃபார்ம் பண்ண போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.