காஸா பகுதியில் மேலும் ஒரு இலங்கைப்பெண் மாயம்!
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
காஸா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனை
இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் , தூதரகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் 0094 - 716640560 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாக தகவல்களை அனுப்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.