தங்காலை போதைப்பொருள் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல்
தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21 ஆம் திகதி இரண்டு கப்பல்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருட்கள் குடவெல்ல, மாவெல்ல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து, கடற்கரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கொள்கலன்மூலம் சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
705 கிலோகிராம் போதைப்பொருட்கள்
குறித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் கூறிப்பிட்டுள்ளனர்.
தங்காலை - சீனிமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 705 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 988 கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.