பட்டா ரக லொறியொன்றுடன் மோதிய மற்றுமொறு லொறி
நீர்கொழும்பு - குருநாகல் வீதியின் தம்பதெனிய பகுதியில் இன்று காலை வீதி விபத்துச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டா ரக லொறியொன்று பயணித்துகொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி விதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியொன்றுடன் பின்பக்கமாக மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடம் பெற்ற விபத்து
இந்த விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பக்கமாக பட்டா ரக லொறி மோதியதில் முன்பக்கமாக நகர்ந்து சென்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி, முன்னால் நிறுத்தப்பட்ட இ.போ.ச பயணிகள் பஸ்ஸின் பின் பக்கமாக மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பட்டா ரக லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் தம்பதெனிய தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.