உக்ரைனில் மற்றுமொரு இந்திய மாணவன் பலி
உக்ரைனில் கல்வி பயின்று வந்த மாணவர் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று காலை முதல் ரஷ்ய படைகள் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன.
குறிப்பாக அரசு அலுவலகங்களான போலீஸ் அலுவலகங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டிடங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தால் ஜிண்டால் என்ற 22 வயது மருத்துவ மாணவர் வின்னிட்சியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று ரஷ்ய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார்.