நாட்டில் மீண்டும் ஒரு எரிவாயு வெடிப்புச் சம்பவம்!
எம்பிலிப்பிட்டிய பகுதியில் மீண்டும் ஒரு எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய, கதுருகஸ்ஆர சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கடை உரிமையாளரின் வீட்டின் சமையலறையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 43 வயதான வீட்டு உரிமையாளர் மொஹமிதிரமிகே இந்திக, நேற்று மாலை தண்ணீர் கொதிக்க வைப்பதற்காக எரிவாயு அடுப்பை மூட்டிவிட்டு தண்ணீர் வைத்துவிட்டு வரவேற்பறையில் இருந்தபோது, சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் எரிவாயு அடுப்பு வெடித்துத் தீப்பற்றி எரிவதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து , உடனடியாக தீ பரவலைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார். சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பின் போது சம்பவ இடத்தில் எவரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சத்தம் கேட்டதால் தீயை அணைத்ததாகவும் அவ்வாறு இல்லாவிட்டால் பெரும் விபத்து ஏற் பட்டிருக்கலாம் எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்