மீண்டுமொரு எரிவாயு சிலிண்டர் வெடித்தது; அச்சத்தில் மக்கள்
நிக்கவெரட்டிய, கந்தேகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் எரிவாயு வெடிப்பு என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்த நிக்கவெரட்டிய பொலிஸார் இதன் காரணமாக ஏற்பட்ட தீயினால் வீடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சம்பவத்தின்போது வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வயலுக்குச் சென்றிருந்த நிலையில், பிள்ளைகளும் வெளியே சென்றிருந்த நிலையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் வீட்டு எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு அல்லது வேறு காரணங்களால் இந்த வெடிப்பு நிகழ்ந்ததா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வாயு வெடிப்பு சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளதுடன் நவம்பரில் மாத்திரம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.