இலங்கையில் பெரும் சோகம்; இளம் மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த Dr. ராசிக் முகமட் ஜனுன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மான்குளத்தை சேர்ந்த Dr. ராசிக் முகமட் ஜனுன் மருத்துவர் ராகம வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை அவரின் மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டம் இணைப்பு
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
34 வயதுடைய மொஹமட் ஜனன் என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தொற்று ஏற்பட்டதை தெரிந்து தாம் பணியாற்றிய அதே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மருத்துவர் கோவிட் தடுப்பூசி இரண்டினையும் பெற்றிருந்த்தாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.