ஏழுபேரின் உயிர்களை பலியெடுத்த அதே இடத்தில் மீண்டும் விபத்து
நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் மீண்டும் இன்று வேன் விபத்து இடம்பெற்றுள்ளது. நானுஓயா, ரதெல்ல பகுதியில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேனொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த வேன் வீதியை விட்டு விலகி வீதியின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகியிருந்தால் உயிர் சேதங்கள் இடம் பெற்றிருக்கும் எனவும் , எனினும் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கிறனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளது .
அதேவேளை நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேரின் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.