இன்று மாலை அறிவிப்பு ; இழுத்தடிக்கும் விசிக; டென்சனில் தவெக!
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று (09) மாலை 4 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்படுகின்றது.
தமிழ்நாட்டில் தவெக தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கக் கோரி அக்கட்சியின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

ஆதரவு அளித்தால், விஜய் இன்று மாலையே பதவியேற்கும் வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க, தவெகவுக்கு இன்னமும் 2 இடங்கள் குறைவாக இருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்தால், விஜய் இன்று மாலையே தமிழக முதல்வராக பதவியேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து இன்று காலை 11 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பார் என்று காலை முதலே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் நிர்வாகிகள், அரசியல் நகர்வுகள் குறித்து முடிவெடுக்க கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இன்று மாலை 4 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா என்பதை சனிக்கிழமை காலை அறிவிப்பதாக தொல். திருமாவளவன் நேற்று கூறியிருந்த நிலையில், இன்று மாலை அறிவிக்கப்படும் என மீண்டும் கூறியுள்ளமை தவெக உறுப்பினர்களின் பொறுமையை சோதிப்பதாக அமைந்துள்ளது.