முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பிலான அறிவிப்பு
இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர,
அதற்கு எந்த மதிப்பும் இல்லை
ஒவ்வொரு சங்கமும் முச்சக்கர வண்டி கட்டணத்தை அறிவிக்க அனுமதிக்காமல், அரசாங்கமே அதை தீர்மானிக்க வேண்டும் என்றார். பெட்ரோல் விலை குறைந்துள்ளது.
முச்சக்கர வண்டி கட்டணத்தை அதற்கு அமைவாக குறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு குறைக்க வேண்டும்? இனி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை." குறைக்க முடியும். குறைக்க வேண்டும்.
ஆனால் யதார்த்தமான ஒரு நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும். முச்சக்கர வண்டி கட்டணம் இப்போது பெயரளவில் ரூ. 100 மற்றும் ரூ.85 ஆகும். இது தற்போது செயற்படுவதில்லை.
வெறும் வாய் வார்த்தையால் கூறி பயனில்லை. முச்சக்கர வண்டி சங்கங்கள் இனியும் கட்டணத்தை நிர்ணயிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை.
அதை அறிவித்தாலும் பயனில்லை, அதற்கு எந்த மதிப்பும் இல்லை. பொதுப் போக்குவரத்திற்கான கட்டணம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்துங்கள்.
நாட்டிற்குப் பொருத்தமானதைச் செய்யும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உள்ளது என்றும் இதில் அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் கூறினார்.