பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அறிவிப்பு
நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த அரசாங்கப் பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான நடைமுறைகள் குறித்த சுற்றறிக்கை இன்று (டிசம்பர் 9, 2025) வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கல்லூவெவ தெரிவித்துள்ளார்.
மட்டுமல்லாமல், மாகாண ரீதியில் பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சியுள்ள அனைத்துப் பாடங்களும் ஜனவரி மாதத்தில் கூடிய விரைவில் நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.