லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு
மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேவேளை பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இரண்டாவது மாதமாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படவுள்ளது.

பண்டிகைக் காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை
நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் சந்தையில் எரிவாயு சிலிண்டர்கள் பின்வரும் விலைகளில் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ,
12.5 கிலோ கிராம் சிலிண்டர்: ரூபா 3,690, 5 கிலோ கிராம் சிலிண்டர்: ரூபா 1,482, 2.3 கிலோ கிராம் சிலிண்டர்: ரூபா 694 சந்தையில் தட்டுப்பாடின்றி எரிவாயுவை விநியோகிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மார்ச் மாதத்திற்காக மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.இதில் முதற்கட்டமாக 7,800 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.
எஞ்சிய 30,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் தற்போது மாலைதீவு கடற்பரப்பில் தயார் நிலையில் உள்ளது.
அங்கிருந்து தேவையான கையிருப்பு உடனுக்குடன் நாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாவ பண்டிகைக் காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிறுவனம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.